சினிமா செய்திகள்

கார்ப்ரேட்கள் நடத்தும் ட்விட்டர் போர்; பலிகடா ஆகும் அஜித் – விஜய் ரசிகர்கள்!

Published

on

படங்களை புரமோட் செய்ய டிஜிட்டல் மார்க்கெட்டிங் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீம்ஸ் க்ரீயேட் செய்யவே பல ஆட்களை வேலைக்கு வைத்து இவர்கள் தொழில் நடத்தி வருகின்றனர்.

அவ்வப்போது டிரெண்டாகும் ஹேஷ்டேகுகள் ஒரே நொடியில் பல லட்சம் பார்வையாளர்களை சென்று சேர்வதும் இவர்களின் திருவிளையாடல்தான்.

படத்திற்கான விளம்பரத்தை பாசிட்டிவாக செய்தது ஒரு காலம். ஆனால், தற்போது நெகட்டிவ் பப்ளிசிட்டியே பெருகி உள்ளது.

சமீபத்தில், மோடியின் பதவியேற்பு விழாவை டம்மி ஆக்க, நேசமணி ஹேஷ்டேகை டிரெண்ட் செய்தது போல.

சாமானியர்கள் க்ரீயேட் செய்யும் ஒன்று ஒரே நொடியில் பல மில்லியன் பார்வையாளர்களை சென்று சேராது.

ஆனால், இவர்கள் கொளுத்தி போடும் தீ, ஒரே நொடியில் ஒட்டுமொத்த காட்டையும் அழித்து விடும்.

அவ்வப்போது விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே சண்டை மூட்டி விடுவதும் இந்த கும்பல் தான்.

இதனை அறியாத விட்டில் பூச்சிகளாக தலயை பற்றி தளபதி ரசிகன் சொல்லிவிட்டான் என இவர்கள் ஒரு கும்பலாக வசைபாட கிளம்ப, தளபதியை பற்றி தப்பா பேசிவிட்டான் என அங்கிருந்து இன்னொரு கும்பல் கிளம்ப என இவர்கள் பற்ற வைத்த நெருப்பு பக்காவாக பற்றி எரிகிறது.

ஆகஸ்ட் 8 தல தரிசனம் என்ற ஹேஷ்டேகை உருவாக்கிய கும்பலே ஆகஸ்ட் 8 பாடைக்கட்டு ஹேஷ்டேகையும் உருவாக்கி இந்த ரசிகர்களின் மோதலில் கல்லாகட்டுகின்றன.

அஜித் ரசிகர்கள் கொந்தளித்து விட்டதாக ரிப் ஆக்டர் விஜய் என்றும், லாங் லிவ் விஜய் என்றும் ஹேஷ்டேகுகளை உருவாக்கி அவர்களுக்கு தேவையான விளம்பரத்தை செய்து கவனம் பெறுகின்றனர்.

தல – தளபதி ரசிகர்களின் சண்டையை காசுக்கும் கும்பலிடம் இருந்து சுய சிந்தனையுடன் செயல்பட்டால் தான் ரசிகர்கள் தப்பிக்க முடியும்.

seithichurul

Trending

Exit mobile version