சினிமா செய்திகள்

மாற்றப்பட்ட ட்விட்டர் பயோ… நடிகர் தனுஷைக் கொண்டாடும் ரசிகர்கள்!- ட்ரெண்டிங்

Published

on

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பயோ-வை மாற்றி உள்ளதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் எனக் கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரமாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜெகமே தந்திரம், கர்னன், இயக்குநர் கார்த்திக் நரேன் உடன் ஒரு பெயர் அறிவிக்கப்படாத படம், புதுப்பேட்டை 2, நானே வருவேன், அத்ரங்கி ரே என வரிசையாக பட வெளியீட்டுக்காக் காத்திருக்கிறார்.

மற்ற நடிகர்களைப் போல ஒவ்வொரு படமாக இல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான படங்களை மொத்தமாக அறிவித்து ரசிகர்களைக் குஷி படுத்துபவர் நடிகர் தனுஷ். தற்போது நடிஅக்ர் தனுஷ் தனது ட்விட்டர் பயோ-வை ‘அசுரன்’ என மாற்றியுள்ள செய்தி வைரலாகி உள்ளது. தனுஷ் உண்மையிலேயே நடிப்பு அசுரன் தான் என ரசிகர்கள் சமுக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அசுரன் தனுஷ் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியும் வருவது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version