சினிமா

“அக்னிதேவ்“ படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது!

Published

on

பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலைத் தழுவி இப்படம் ரெடி ஆக உள்ளது. இப்படத்தில் பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் டெரர் வில்லியாகச் சகுந்தலாதேவி என்ற கதாபாத்தில் அமைத்ததாக நடிக்கிறார் மதுபாலா. சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதுபாலா தமிழில் நடிக்கும் படம் இது. அக்னிதேவ் படத்தின் முதல் டிரைலர் வெளியாகி உள்ளது. இப்படத்தைச் சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குநர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குநர் சாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர். ஜனா ஒளிப்பதிவு, ஜாப்ஸ் பீஜய் இசை. தீபக் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார்.

இப்படத்தில் போலீசாகப் பாபி சிம்ஹா, அரசியல் கட்சி தலைவியாக மதுபாலா நடித்துள்ளனர். இதுவரை அவர் நடித்திராத ஒரு வித்தியாசமான படமாக அக்னிதேவ் அவருக்கு அமையும் என்பது டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

Trending

Exit mobile version