சினிமா செய்திகள்

சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டு நீக்கம்: என்ன நடந்தது?

Published

on

நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டு நீக்கப்பட்டதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளதை அடுத்து அவர் நடித்து வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்திற்கு பெப்சி தொழிலாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடித்த ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தில் அவர் முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் அதனால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என்றும் அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் லிங்குசாமியிடம் அட்வான்ஸ் பணம் பெற்ற சிம்பு அவருடைய படத்தில் நடித்து கொடுக்கவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார்கள் குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தற்போது சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் மைக்கேல் ராயப்பன் தயாரித்து ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ திரைப்படத்தின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பின்படி இருவரும் நடந்து கொள்ள வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லிங்குசாமியிடம் பெறப்பட்ட பணத்தை வட்டியின்றி திருப்பி தர சிம்பு தரப்பில் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவுக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டதால் அவர் நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்துக்கு பெப்சி தொழிலாளர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் தற்போது அந்த ரெட்கார்ட் நீக்கப்பட்டுள்ளது அடுத்து பெப்சி சங்கம் உள்பட அனைத்து சங்கமும் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுக்கு தற்போது அடுத்தடுத்து படங்களின் வாய்ப்புகள் குவிந்து வருவதை அடுத்து சிம்புவுக்கு ரெட் கார்ட் நீக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version