சினிமா செய்திகள்

ஸ்பாய்லராக மாறிய ஸ்பைடர்மேன் டிரைலர்?

Published

on

ஸ்பைடர்மேன் ஹோம்கமிங் அடுத்த பாகமான ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

24 மணி நேரத்தில் இதுவரை இந்த டிரைலரை 2.4 கோடி பேர் பார்த்துள்ளனர். உலகளவிலும் டிரெண்டிங்கில் டிரைலர் உள்ளது. ஆனால், இந்த டிரைலர் மிகப்பெரிய ஸ்பாய்லராக மாறியுள்ளதாக ரசிகர்கள் கணித்துள்ளனர்.

ஸ்பைடர்மேன் ஹோம்கமிங் படத்தில் அயன்மேன் டோனி ஸ்டார்க், தான் ஸ்பைடர்மேனுக்கு வேலை கொடுப்பார். அவெஞ்சர்ஸ் படத்திலும் அதன் தொடர்ச்சி இருக்கும். இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த டிரைலரில் அயன்மேனை காட்டவே இல்லை.

இதனால், வரும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் தானோஸை வீழ்த்தும் போரில் அயன்மேன் இறந்துவிடுவார் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த டிரைலர் மிகப்பெரிய ஸ்பாய்லராக மாறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வரும் ஜூலை 5ம் தேதி ஸ்பைடர்மேன் படம் உலகமெங்கும் திரைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக மார்வெலின் கேப்டன் மார்வெல் திரைப்படமும் வெளியாகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version