அழகு குறிப்பு

தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு!

Published

on

கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும்.

கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து வர முடி உதிராது. அடர்த்தியா நன்றாக வளரும். தலையும் குளிர்ச்சியாகும்.

செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்கு தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணேய் கலந்து தலையில் தேய்த்து வர முடி உதிராது. கருமையாக வளரும்.

முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

7 – 8 சிறிய வெங்காயம், ஒரு ஸ்பூன் காற்றாழை ஜெல் மற்றும் வல்லாரை பொடி ஒரு ஸ்பூன் ஆகியவற்றை மிக்சியில் பேஸ்ட்டு போல் அரைத்து அதனை தலையில் அப்ளை செய்ய வேண்டும்.

சிறிது நேரம் கழித்து நன்கு அலச வேண்டும். இதனை வாரம் ஒரு முறை ட்ரை செய்தால் முன் நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும். மேலும் கால்சியம், விட்டமின் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

ஆலிவ் ஆயிலை 15 நிமிடம் தலையில் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் தலைக்கு குளித்தால் தலை முடி நன்றாக வளரும்.

சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, சாறு வெளிவந்த பின், வடிகட்டி ஸ்கால்ப்பில் மசாஜ் செய்ய வேண்டும்.

வெங்காய சாறு கலந்த தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி, ஆறிய பின் தலையில் தடவி ஊறவைத்து, குறித்தால் வேர் வலுப்படும்.

அதிக வெப்பம் தலைமுடியை பாதிக்கும். ஆகையால் முடிந்த வரை ப்ளோ டிலையர், ஃப்ளாட் ஐயன் அல்லது கர்லிங் ஐயன் ஆகியவற்றை தவிர்ப்பது சிறந்தது.

தேங்காய், ஆலிவ், அவகடோ எண்ணெய் ஆகியவை உங்கள் தலையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். எனவே தலை முடியின் வேரிலிருந்து எண்ணெய்யை தேய்க்கவும். அதிக கெமிக்கல் இல்லாத உபயோகிப்பது நல்லது.

seithichurul

Trending

Exit mobile version