விமர்சனம்

The Serpent – விமர்சனம்

Published

on

70-களின் மத்தியில் ஆசிய கண்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்துவிட்டு ஒரு இந்திய வம்சாவளி குற்றவாளி உலகம் முழுவதும் உல்லாசமாக சுற்றித் திரிந்திருக்கின்றான். அவனைப்பற்றிய கதை தான் இந்த The Serpent.

உலகம் முழுவதும் ஆலன் பயணம் செய்யும் சார்லஸ் சோப்ராஜ் தன்னை ஒரு வைர வியாபாரியாக அடையாளப்படுத்திக்கொள்கிறான். செல்லும் நாடுகளில் எல்லாம் அங்கே புதிதாக வரும் சுற்றுலா பயணிகள் தான் இவன் டார்கெட்.

அவர்களை சந்தித்து தன்னுடைய இடத்திற்கு வர வைத்து, குறைந்த விலையில் வைரம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறுவான். அதன்பின்னர் தன்னுடைய வீட்டில் நடக்கும் பார்ட்டியில் பங்கு பெற செய்து அவர்களுக்கு நன்றாக போதை ஏற்றி விட்டு அவர்களிடம் இருக்கும் பணம், பாஸ்போர்ட் என எல்லாவற்றையும் புடுங்கிக்கொண்டு அவர்களை கொலை செய்துவிடுவான். இதுக்கு தன்னுட்டைய காதலி மரியா மற்றும் நண்பன் அஜயை உடன் வைத்துக்கொள்வான்.

எல்லாக் கொலைகளும் மிக சாதாரணமாக நடத்தி விடுகிறான். அவன் செய்யும் ஒரு கொலையை பேப்பரில் படிக்கும் ஹெர்மன் என்ற போலீஸ் அதிகாரி ஒவ்வொரு கொலையாக தோண்ட ஆரம்பிக்கிறார். அதில் இருந்து தான் பல அதிர்ச்சிகள் வெளி வர தொடங்குகின்றன. ஒரு கொலையை பின் தொடரும் அவருக்கு பல்வேறு கொலைகள் அதே போல நடந்திருப்பது தெரிய வருகிறது.

அதன் பின்புலத்தில் இருக்கும் சோப்ராஜ் பற்றி தெரிந்தாலும் அதை பின்பற்றி அவனை கைது செய்ய உரிய ஆதாரங்கள் இல்லாமல் தவிக்கிறார். ஆதாரங்களை திரட்டும் காட்சியும், சோப்ராஜ் கொலை செய்தும் காட்சிகளும் ஒரே பாதையில் செல்கின்றன. நல்ல சுவாரஸ்யமான கதை கொஞ்சம் கூடுதலாக சுவாரஸ்யபடுத்தி சொல்லியிருக்கிறார்கள்.

தொடரின் மிகப்பெரிய பலம் மற்றும் பலவீனம் கொலை மற்றும் கொலையை கண்டு பிடிக்கும் காட்சிகள் தான். மிகப்பெரிய குழப்பத்தை தருகின்றன. திடீரென 3 மாசத்துக்கு முன் எனவும் 10 மாசத்துக்குப் பின் எனவும் 6 ஆண்டுகள் முன் எனவும் காலத்தில் பல குழப்பம். தொடர்ந்த அதை கவனிக்க முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அதை அப்படியே விட்டுவிட்டு கதையில் கவனம் செலுத்த தொடங்கிவிட வேண்டியதுதான் வேறு வழியில்லை. தொடரில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் கதாபாத்திரம் நிச்சயம் நம் மனதில் ஒட்டும். ஆனால், கதையை சொன்ன விதத்தில் இருக்கும் குழப்பம் எதையும் ரசிக்க விடவில்லை.

இவ்வளவு கொலைகளை எளிதாக செய்வதும் என்ன சிக்கலும் இல்லாமல் நாடு விட்டு செல்வதும் என ராஜா வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான் சோப்ராஜ். உண்மைதான் என்றாலும் அதை ஏற்க கொஞ்சம் தயக்காம இருக்கிறது. பல காட்சிகள் முன் கூட்டியே அனுமானிக்க கூடியதாக இருந்தன. கதை சொன்ன விதத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவு காட்டியிருந்தால் நிச்சயம் இந்த the serpent ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்திருக்கும்.

பல காட்சிகள் ஏன் என்றே தெரியாமல் மிக நீளமாக இருந்தது சோர்வையும் ஏற்படுத்துகிறது. வரலாற்று கதைகளை ஒரு நபரின் கதைகளை இதைவிட சிறப்பாக சொன்ன பல சீரியஸ் நமக்கு இருக்கின்றன. ஆனாலும், ஓர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உலகில் உள்ள அனைத்து காவல்துறைக்கும் எந்த அளவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். யார் அந்த சார்லஸ் சோப்ராஜ். அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை ஒரு 8 எப்பிசோடாக இருக்கும் இந்த தொடரைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

பெரிய மோசம் எல்லாம் செய்யாது இந்த உண்மை கதை. என்ன கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம் என்பதுதான் நம் எண்ணம். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

8 எப்பிசோடுகளாக நெட்பிலிக்ஸில் பார்க்க கிடைக்கிறது…

seithichurul

Trending

Exit mobile version