தமிழ்நாடு

சட்டப்பேரவையில் வன்னியர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!

Published

on

சட்டப்பேரவையில் இன்னும் சில நிமிடத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்ற நிலையில் அதற்கு முன்னரே தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இன்று காலை முதல் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அடுத்ததாக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை இன்று பிற்பகலில் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு இந்த மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அதிமுக அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்தால்தான் அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்ற நிபந்தனை விதித்து இருந்ததாகவும் அந்த நிபந்தனையின் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது

சற்றுமுன் வந்த தகவலின்படி வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், அரசு பணி நியமனங்களில் 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

 

seithichurul

Trending

Exit mobile version