சினிமா செய்திகள்
சாஹோ படத்தின் ரொமாண்டிக் பாடல் இன்று ரிலீஸ்!
வரும் ஆகஸ்ட் மாதம் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும் மாதம் போல் மாறி வருகிறது. ஆகஸ்ட் 8ம் தேதி அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸாகிறது. அடுத்ததாக 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பிரபாஸின் சாஹோ படம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளிவருகிறது.
இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.
படத்தில் இடம்பெற்றுள்ள ”மழையும் தீயும்” என்ற பாடலின் டீசர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என 4 மொழிகளில் இன்று வெளியாகும் என படத்தின் நாயகி ஷ்ரத்தா கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் படம் வெளியாவதால், உலகளவில் பல்லாயிரக் கணக்கான தியேட்டர்களில் சாஹோ படத்தை வெளியிட்டு மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்க அந்த படத்தின் குழு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.