உலகம்
‘அமெரிக்க அதிபராக வரத் தயார்..!’- மக்கள் ஆதரவால் அதிரடி முடிவெடுத்த ‘The Rock’
WWE மல்யுத்த விளையாட்டின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் ‘தி ராக்’ என்னும் டுவைன் ஜான்சன். 90களில் WWE உச்ச நட்சத்திரமாக இருந்த ராக், பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஹாலிவுட்டில் தொடர்ந்து அவர் நடித்த ஆக்ஷன் திரைப்படங்கள் ஹிட் அடித்தது. தற்போது ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். அவர் நடிப்பில் வெளி வரும் படங்களுக்கு என்றே உலகளவில் காத்திருந்து பார்க்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் தனியார் அமைப்பு ஒன்று அமெரிக்க அதிபராக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் 46 சதவீத மக்கள் டுவைன் ஜான்சன் அதிபராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராக், ‘நம் நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் இருக்கிறது. அப்படித் தான் மக்களும் விரும்புகிறார்கள் என்றால் அதற்கு நான் தயார்’ என்று அதிரடி முடிவை அறிவித்துள்ளார். தற்போது ராக்கிற்கு 48 வயதாகிறது. அடுத்த அமெரிக்க தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.