இந்தியா

மோடி திரும்பி போனதுக்கு இதுதான் காரணம்!…பஞ்சாப் முதல்வர் விளக்கம்…

Published

on

பஞ்சாப்பில் உள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேச சென்ற பிரதமர் மோடி பஞ்சாப் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக திரும்பி சென்றதுதான் இன்றைக்கு முக்கிய செய்தியாக இருக்கிறது.

பஞ்சாபில் விரைவில் தேர்தல் நடிக்கவுள்ளதால் அங்கு செல்ல முடிவெடுத்தார் மோடி. விமான நிலையத்தில் இறங்கி ஹெலிகாப்டர் செல்ல அவர் முடிவெடுத்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக செல்ல முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், ஒரு பாலத்தில் அவரின் வாகனத்தை பஞ்சாப் விவசாயிகள் மறித்தனர். எனவே, சுமார் 20 நிமிடம் மோடி காரிலேயே காத்திருந்தார். பின் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்ப சென்றார்.

இது பாஜகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இது பஞ்சாப் மாநில அரசின் பாதுகாப்பு குறைபாடு என குற்றம் சுமத்தியது. ஆனால், இதை அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மறுத்துள்ளார்.

பிரதமர் திடீரென சாலை மார்க்கமாக செல்ல முடிவெடுத்தது பற்றி எங்களிடம் எந்த தகவலும் தெரிக்கவில்லை. பாதுகாப்பு குறைபாடு என்பதில் உண்மையில்லை. பாஜகவினர் இதை அரசியலாக்குகின்றனர். 7 ஆயிரம் பேர் அமர வேண்டிய மாநாட்டில் வெறும் 700 பேர் மட்டுமே இருந்தனர் என அவர் தெரிவித்தார்.

பாஜக அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஒரு வருடமாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அங்கும் தேர்தல் வருவதையொட்டி, இந்த வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றார் மோடி. ஆனாலும், பஞ்சாப் விவசாயிகளின் கோபம் இன்னும் தணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முதலே டிவிட்டரில் #GoBakModi எனும் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version