தமிழ்நாடு

நீக்கப்பட்ட திருநாவுக்கரசர்.. காங்கிரஸின் தலைவர் மாற்றத்திற்கு என்ன காரணம்?

Published

on

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதற்கும், புதிய தலைவர் நியமிக்கப்பட்டதற்கும் என்ன காரணம் என்பது குறித்த பரபர தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய செயல் தலைவர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நேற்று இரவு இதற்கான அறிவிப்பு வெளியானது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் என்பது பல நாட்களாக திட்டமிடப்பட்டு ஒன்று என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மீது தலைமைக்கு நிறைய புகார்கள் சென்று இருக்கிறது. கட்சி ரீதியாக காங்கிரஸ் வலுவாக இருந்தாலும், கட்சிக்குள் பெரிய அளவில் ஒற்றுமை இல்லை என்று ராகுல் காந்திக்கு புகார் சென்று இருக்கிறது. இதனால் அவரை மற்ற வேண்டும் என்று சில தரப்பு ராகுலிடம் வலியுறுத்தி இருந்ததாக தெரிவிக்கிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version