சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலக இதுதான் உண்மையான காரணமா?

Published

on

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் கமல்ஹாசன் அறிக்கை விட்டிருந்தார் என்பதும் இதனை அடுத்து சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு மற்றும் ஒரு சில காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் கூறியிருந்தாலும் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு உண்மையான காரணம் வேறு என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை ஹாட்ஸ்டார் பெற்றிருப்பதாகவும் இதனை அடுத்து விக்ரம் படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக ஹாட்ஸ்டார் நிறுவனமே வலுக்கட்டாயமாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலக்கி உள்ளதாகவும் விக்ரம் படத்தை முழு வீச்சில் சீக்கிரம் முடித்து தங்களுக்கு தர வேண்டும் என்று கமல்ஹாசனிடம் ஹாட்ஸ்டார் கறாராக கூறியதால் தான் கமல் வேறு வழியின்றி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது .

விக்ரம் திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அதன் பின்னர் 15 அல்லது 20 நாட்களில் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதால் அந்த படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காகவே ஹாட்ஸ்டார் அவரை கழட்டி விட்டதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version