தமிழ்நாடு

தபால் வாக்குகள் பெறும் பணி துவக்கம்: வீடுகளுக்கே நேரில் சென்று சேகரிக்கும் அதிகாரிகள்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் வாக்குகளை பெறும் பணியில் தேர்தல் அதிகாரிகள் உள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தபால் வாக்குகள் பதிவு செய்யும் நபர்களிடம் வீடு தேடிச் சென்று தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இன்று முதல் ஒரு சில நாட்களுக்கு தமிழகம் முழுவதும் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
சேகரிக்கப்படும் தபால் வாக்குகள் சீலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே இரண்டாம் தேதி இந்த வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்படும் என்றும் கூறப்படுகிறது

தமிழகத்தில் பெரும்பாலும் தபால் வாக்குகளால் பெரிய மாற்றம் ஏற்படாது என்றாலும் ஒரு சில தொகுதிகளில் குறைவான வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெறும்போது மட்டும் தபால் வாக்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை வயதானவர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படுகிறது என்பதும் ஏற்கனவே தபால் வாகனங்களுக்கான விண்ணப்பம் பெறும் பணி முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே.

seithichurul

Trending

Exit mobile version