செய்திகள்

பிப்ரவரி 5 ஆம் தேதி இளவரசி விடுதலை

Published

on

பிப்ரவரி 5 ஆம் தேதி இளவரசி விடுதலையாகப் போவதாகச் சிறைத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. எனவே இவர்கள் பெங்களூருவில் உள்ள பார்ப்பன சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சுதாகரன் தரப்பில் கடந்த மாதம் அபராதத் தொகையான ரூ.10கோடியே 10 ஆயிரத்தை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

கடந்த 18ம் தேதி சசிகலாவின் அபராதத் தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரம் செலுத்தப்பட்டது. சிறை தண்டனை முடிவடைந்த நிலையில் தற்போது சசிகலா மட்டும் வரும் 27 ஆம் தேதி விடுவிக்கப்பட உள்ளார். அவரை வரவேற்கும் வகையில் அமமுக சார்பில் வரவேற்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கர்நாடகா எல்லையில் இருந்து சென்னை வரும் வழியில் சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு மரியாதை செய்யபட உள்ளது.

இந்தச் சூழலில் பிப்ரவரி 5 ஆம் தேதி இளவரசியும் விடுவிக்கப்படுவார் என சிறைத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version