இந்தியா

ஒரு பிளேட் அரிசிக்கஞ்சி ரூ.1380: மருத்துவமனை நிர்வாகத்தை அலற வைத்த கொரோனா நோயாளி!

Published

on

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு கொடுக்கப்பட்ட அரிசி கஞ்சிக்கு 1.380 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து அந்த கொரோனா நோயாளி மருத்துவமனை நிர்வாகத்தை அலற வைத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சேர்ந்தவர் சபீனா. இவருக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து கேரள அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம் ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது ரூ.50 ஆயிரம் ரூபாய் கட்ட மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல மணி நேரம் கழித்தும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அரிசி கஞ்சி மற்றும் ஒருசில மாத்திரைகளை மட்டும் கொடுத்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் உள்ள நிலை குறித்து உறவினர்களிடத்தில் போனில் தெரிவித்ததை அடுத்து அவரது உறவினர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர்.

இதையடுத்து ஏப்ரல் 19ஆம் தேதி தேதி சபீனா டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது மருத்துவமனை நிர்வாகம் பில் கொடுத்துள்ளது. அதில் 24 மணி நேர சிகிச்சைக்காக மட்டும் 24 ஆயிரத்து 760 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதில் அரிசி கஞ்சி என்ற பெயரில் உணவாகக் கொடுத்து விட்டு அதற்கு 1,380 ரூபாய் கட்டணம் என்று கூறியுள்ளனர். அதேபோல் பி.பி.ஈ கிட் கட்டணமாக 10 ஆயிரத்து 416 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு சபீனா முன்பணமாக கட்டிய தொகையில் இருந்து கழித்து கொண்டு மீதி பணத்தை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ளது

இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த சபீனா மருத்துவமனையின் அநியாய கட்டணம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரை வாபஸ் பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் கெஞ்சி வருகிறதாம். சபீனாவிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பி தருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியபோதிலும் சபீனா தனது புகாரை வாபஸ் வாங்க மறுத்துவிட்டதால் மருத்துவமனை நிர்வாகம் தற்போது அலறி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version