இந்தியா

2023ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலா தலங்கள்.. நியூயார்க் டைம்ஸ் பரிந்துரை செய்த ஒரே இந்திய மாநிலம்!

Published

on

2023 ஆம் ஆண்டு உலக அளவில் சுற்றுலா செல்லக்கூடிய சிறந்த பகுதிகள் எவை எவை என்பது குறித்த பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு மாநில மட்டுமே இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா என்பது உலகம் முழுவதும் பரவி வரும் ஒரு துறை என்பதும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் எடுத்த கருத்துக்கணிப்பின்படி 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுற்றி பார்க்க வேண்டிய சில அற்புதமான இடங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் ஒரே ஒரு மாநிலம் மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நார்வேயில் உள்ள வடக்கு ஹாட்ஸ்பாட் டிராம்ஸோ, நியூசிலாந்த் நாட்டின்ஆக்லாந்து உள்பட பல பகுதிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இயற்கை அழகு மற்றும் கலாச்சாரத்தை எங்கு அனுபவிப்பது என்பது பற்றிய தகவல்களும் இதில் உள்ளன.,

இந்த பட்டியலில் ஆசிய நாடுகளான வியட்நாம், ஜப்பான், பூட்டான் மற்றும் இந்தியா ஆகியவை உள்ளது. வியட்நாமிற்குச் செல்லத் திட்டமிடுபவர்கள் ஹா ஜியாங் மலைப்பகுதிகள் வழியாக பைக் சவாரி செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள அழகிய மோரியோகா, கியூஷு தீவில் தெருவில் உணவுப்பூங்கா ஆகியவற்றை பார்க்கவும், பூட்டானில் சில பாரம்பரிய இடங்களையும் பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய மாநிலம் கேரளா தான். கேரளாவில் உள்ள புகழ் பெற்ற உப்பங்கழிகள், கடற்கரைகள், குமரகம், பனை மரத்தில் ஏறும் அனுபவம், தென்னை நாரைப் பயன்படுத்தி கயிறுகளை நெசவு செய்யவும் தொழில் செய்யும் இடம் ஆகியவற்றை பரிந்துரை செய்துள்ளது. மேலும் மறவந்துருத்தியில் உள்ள கோவில் நடனங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் கேரளா மூன்று சர்வதேச சுற்றுலா விருதுகளை வென்றுள்ளது. அதில் குளோபல் விஷன் விருது சிறப்பு மிக்கது. கேரளா மாநிலம் அரசின் பொறுப்பான சுற்றுலா முன்முயற்சிகள் குறித்தும் இந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version