தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுத்துறை!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்களும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்வது அல்லது ஒத்திவைக்கப்படுவது குறித்த ஆலோசனை செய்யப்படும் என்று செய்திகள் வெளியானதால் தேர்வு துறையிடமிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றில் பிளஸ் டூ தேர்வில் மொழிப் பாடம் தேர்வு மட்டுமே தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் மற்ற தேர்வுகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 3ஆம் தேதி நடைபெறும் மொழிப்பாட தேர்வு மட்டும் மே 31ம் தேதி நடைபெறும் என்றும் மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்றும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறாமல் தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version