தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட அனுபவம்: நர்ஸ் நெகிழ்ச்சி

Published

on

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் முதலில் சுகாதார பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் போடப்பட்டு வரும் இந்த தடுப்பூசி அடுத்த கட்டமாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் போடுவதற்காக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் பொதுமக்களுக்கு அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த தடுப்பூசியை போடுவதற்கு யாரும் எந்தவித அச்சமும் பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட நர்ஸ் நிவேதா என்பவர் தனது நெகழ்ச்சியான அனுபவத்தை ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடி அவர்களுக்கு தடுப்பூசி போட்ட பின் அவர் என்னிடம் சகஜமாக பேசினார். சொந்த ஊர் எது என்று என்னிடம் அன்புடன் விசாரித்தார் என்றும் கூறினார். மேலும் பிரதமர் மோடி அவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று அந்த நர்ஸ் நிவேதா நெகழ்ச்சியுடன் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version