சினிமா செய்திகள்

பிரபாஸால் சூர்யாவுக்கு வந்த புது பிரச்னை?

Published

on

பிரபாஸ் நடிப்பில் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது, ஆகஸ்ட் 30ம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

அக்‌ஷய் குமாரின் மிஷன் மங்கள் படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், அக்‌ஷய் குமார் படத்துக்கும், பிரபாஸின் சாஹோ படத்துக்கும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஎஃப்எக்ஸ் வேலைகள் இன்னும் கொஞ்சம் நிறைவு பெறாமல் இருப்பதால், படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், ஏற்கனவே ஆகஸ்ட் 30ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட காப்பான் படத்திற்கு தான் பிரச்னை உருவாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2, தானா சேர்ந்த கூட்டம் மற்றும் என்ஜிகே என 3 படங்களும் படுதோல்வியை சந்தித்த நிலையில், காப்பான் படமாவது சூர்யாவுக்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாஹோ படம் போட்டிக்கு வந்த நிலையில், வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version