சினிமா செய்திகள்

இந்தப் படம் 2115-ம் ஆண்டுதான் வெளியாகும்… பிராந்தி பாட்டில் உடன் பூட்டப்பட்ட படம்!

Published

on

ஒரு திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கழித்துதான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆனால், இந்த ஆங்கில திரைப்படம் எடுக்கப்பட்டது 2015-ம் ஆண்டு. இந்தப் படத்தின் தலைப்பு ‘100 ஆண்டுகள்’. இந்தப் படம் எடுக்கப்பட்ட போதே நவம்பர் 2115-ம் ஆண்டு தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 100 ஆண்டுகளில் இந்த உலகம் எப்படியான மாற்றங்களை எல்லாம் சந்திக்கப் போகிறது என்றும் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த உலகம் எப்படி இருக்கும் என்றும் கற்பனையில் இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது.

2115-ம் ஆண்டு வெளியாகப் போகும் இந்தப் படத்துக்கான டேக் என்ன தெரியுமா? ‘இந்த வாழ்நாளில் உங்களால் காண முடியாத படம்’ என்பதே. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்தப் படம் ஆங்கில மொழியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கான கதையை எழுதியவர் ஜான் மால்கோவிக். இந்தப் படத்தின் இயக்குநர் ராபர்ட் ராட்ரிகஸ். இந்தப் படத்தின் கதை நாயகனாகவும் ஜான் மால்கோவிக் நடித்துள்ளார். இவர் ஒரு அமெரிக்கர். படத்தின் நாயகி ஆக தைவான் நடிகை சூயா சங் நடித்துள்ளார்.

2016-ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஒரு குண்டு கூட துளைக்க முடியாத பாதுகாப்புப் பெட்டியில் வைத்து இந்த ‘100 ஆண்டுகள்’ படம் பூட்டப்பட்டுள்ளது. இயக்குநர், கதையாளர் உட்பட அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோருக்கும் உலோகத்தால் ஆன படத்தின் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் தங்களது சந்ததியினருக்குக் கொடுக்கலாம்.

சரியாக நவம்பர் 18, 2115 அன்று இந்தப் பெட்டி தானாகவே திறந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘லூயிஸ் 13’ என பிரான்ஸ் நாட்டு பிராந்தி ரகத்தை தயார் செய்ய 100 ஆண்டுகள் ஆகுமாம். இதை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆக, அந்த பிராந்தி பாட்டில் உடன் இந்தப் படமும் பாதுகாப்புப் பெட்டியில் அடைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கான 3 டீசர்கள் இன்றைய தலைமுறையினருக்காக வெளியிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version