வேலைவாய்ப்பு

மேலாண்மை டிரெய்னி வேலை!

Published

on

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் மினி ரத்னா நிறுவனமான “Indian Rare Earths Ltd” நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 20. மேலாண்மை டிரெய்னி வேலைக்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Management Trainees

மொத்த காலியிடங்கள்: 20

மாத சம்பளம்: ரூ.16,400 – 40,500

வயது: 31.12.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மினரல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், நிதியியல் துறையில் சிஏ, சிஎம்ஏ அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.irel.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 16.06.2019

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.jobapply.in/IREL/2019/MTS/Adv-Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.04.2019

seithichurul

Trending

Exit mobile version