தமிழ்நாடு

பள்ளிகளைத் திறப்பதை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம்: செங்கோட்டையன்

Published

on

பள்ளிகளைத் திறப்பதைவிட மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் பிப்ரவரி மாதம் முதல் முட்டப்பட்டுள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பப்பட்டால், பெற்றோர்கள் அனுமதியுடன் அக்டோபர் 15-ம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அடுத்ததாகப் பிற வகுப்புகளுக்கான பள்ளியும் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளைத் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். பள்ளிகளைத் திறப்பதற்கான உகந்த காலம் இதுவல்ல. பிற மாநிலங்களும் பள்ளிகளைத் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

எனவே ஆன்லைன் வகுப்பைச் சரியாகக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version