சினிமா செய்திகள்

லீக்கான சிங்க பெண்ணே பாடல்; பிகில் படக்குழு அதிர்ச்சி!”

Published

on

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்க பெண்ணே என்ற பாடல் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பிகில் படம் உருவாகி வருகிறது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து, அட்லியுடன் மூன்றாவது முறையாக விஜய் இணைந்துள்ள படம் தான் பிகில்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், படத்தில் கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக படம் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய்யும் இதில் கால்பந்தாட்ட பிளேயராக நடித்துள்ளார். இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அவரே பாடியுள்ள சிங்க பெண்ணே பாடல் இணையத்தில் கசிந்துள்ளது.

இந்த பாடலை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த தகவல் அறிந்த பிகில் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட்டில் படத்தின் பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த பாடல் லீக்கானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version