சினிமா செய்திகள்

உலகிலேயே மிகப்பெரிய கட் அவுட்; தெறிக்கவிட்ட சூர்யா ரசிகர்கள்!

Published

on

என்ஜிகே படத்தை வேற லெவல் வெறித்தனத்துடன் கொண்டாட முடிவு செய்துள்ள சூர்யா ரசிகர்கள், இதுவரை எந்த நடிகருக்கும் வைக்காத அளவுக்கு உலகிலேயே 215 அடி உயர கட் அவுட்டை சூர்யாவுக்காக வைத்து கொல மாஸ் செய்துள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே திரைப்படம் வரும் மே 31ம் தேதி ரிலீசாகிறது.

படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியதில் இருந்து வேகமாக டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் 215 அடி உயரத்திற்கு உலகிலேயே மிக உயரிய கட் அவுட்டை சூர்யாவுக்காக வைத்துள்ளனர். இதற்கு முன்னதாக விஸ்வாசம் படத்திற்காக நடிகர் அஜித்திற்கு 190 அடி உயர கட் அவுட் வைத்ததே அதிகம் என கூறுகின்றனர்.

விஜய்யின் சர்கார் படத்திற்கு 185 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டது. அதனை அஜித்தின் விஸ்வாசம் பட கட் அவுட் முறியடித்தது. தற்போது, சூர்யா ரசிகர்கள் 215 அடிக்கு கட் அவுட் வைத்துள்ளனர்.

இப்படியே இந்த ரசிகர்களின் போட்டியால், கட் அவுட் உயரங்கள் வளர்ந்து கொண்டே போவது, ரசிகர்கள்களின் உயிர்களுக்கு மட்டுமின்றி அந்த பகுதி வாழ் மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் இதுபோன்ற கட் அவுட்களுக்கு எப்படி அனுமதி அளிக்கின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Trending

Exit mobile version