வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தின் வேலை!

Published

on

ஆவின் நிறுவனத்தின் விருதுநகர் கிளையில் காலியிடங்கள் 03 உள்ளது. இதில் டெக்னீசியன் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Technician Gr-II (Electrical) – 01
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்று என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ‘சி’ உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Driver – 01
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Manager (Veterinary) – 01
மாத சம்பளம்: ரூ.55,500 – 1,75,700
கல்வித்தகுதி: Veterinary Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Veterinary Council-லில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துப் பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager, Virudhunagar District Co-operative Milk Producers
Union Limited, Srivilliputtur.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 16.08.2019

seithichurul

Trending

Exit mobile version