சினிமா செய்திகள்

திகில் கிளப்பும் காட்டேரி டிரைலர் ரிலீஸ்!

Published

on

கிருஷ்ணா, கருணாகரன், ஓவியா நடிப்பில் வெளியான யாமிருக்க பயமே எனும் காமெடி பேய் படத்தை இயக்கிய இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள மற்றொரு பேய் படம் தான் காட்டேரி. அதன் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

நடிகர்கள் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா, கருணாகரன் மற்றும் பொன்னம்பலம் என நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

டிரைலரை பொறுத்தவரைக்கும் காமெடி காட்சிகள் என்று எதுவுமே காண்பிக்கபடவில்லை. ஆனால், இயக்குநரின் முந்தைய பேய் படம் படு காமெடியாக இருந்ததால், இந்த படத்திலும் அது போலவே காமெடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது.

ஹாலிவுட் படமான கோஸ்ட்ஷிப் படத்தின் கம்பி அறுந்து அனைவரும் இறக்கும் காட்சியை இந்த படத்தில் காப்பி அடித்து இயக்குநர் வைத்துள்ளது டிரைலர் மூலமாகவே தெரிய வருகிறது.

தற்போது காமெடியில் கலக்கி வரும் யோகி பாபு, யாமிருக்க பயமே படத்தில் தான் பன்னி மூஞ்சி வாயனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version