சினிமா செய்திகள்

ஹீரோவாகும் சரவணா ஸ்டோர் ஓனர்; நாயகி யார் தெரியுமா?

Published

on

பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்னு.. லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் தனது கடை விளம்பரத்திற்காக தமன்னா, ஹன்சிகாவுடன் ஆடினார். இந்நிலையில், தற்போது தமிழ் படமொன்றில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவிடம் படக்குழுவினர் பேசி வருகின்றனராம்.

விளம்பரங்களில் சரவணன் நடித்து வந்த போது பலரும் அவரது உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் மற்றும் டிரோல் செய்து வந்தனர்.

ஆனால், அதையும் மீறி தனது விடா முயற்சியால் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வந்த சரவணின் தன்னம்பிக்கையையும் பலர் பாராட்டத் துவங்கியுள்ளனர்.

தற்போது விளம்பர இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய தமிழ் படத்தில் சரவணன் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version