சினிமா செய்திகள்

ஹாலிவுட் ‘தி கிரே மேன்’ படத்தில் தனுஷ் கதாபாத்திரம் என்ன?- பகிர்ந்த அமெரிக்க எழுத்தாளர்

Published

on

ஹாலிவுட் ‘தி கிரே மேன்’ படத்தில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரம் குறித்தத் தகவலை அந்தக் கதையின் எழுத்தாளர் பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ் ‘தி கிரே மேன்’ என்னும் ஹாலிவுட் படத்தில் இணைவது மூலம் கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டில் முதன்முறையாகத் தடம் பதிக்கிறார். ஏற்கெனவே ‘தி அட்வென்சர்ஸ் ஆஃப் தி ஃபகிர்’ என்னும் ஐரோப்பிய படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார். ‘தி கிரே மேன்’ தனுஷின் இரண்டாவது சர்வதேச திரைப்படம் ஆகும்.

இந்தப் படத்தை மார்வெல் படங்களான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், தி கேப்டன் அமெரிக்கா ஆகிய படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்குகின்றனர். தி கிரே மேன் படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ரியான் கோஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கலிஃபோர்னியாவில் நடந்து வருகிறது.

இதற்காக அங்கு பல மில்லியன் டாலர்கள் செலவில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதற்கட்டமாக ‘தி கிரே மேன்’ படத்துக்காக நடிகர் தனுஷ் இரண்டு மாத கால கால்ஷீட் கொடுத்துள்ளார். படத்தில் தனுஷ் கதாபாத்திரம் குறித்து ‘தி கிரே மேன்’ நாவல் எழுத்தாளர் மார்க் கிரேனி கூறுகையில், “படத்தில் தனுஷ் கொலையாளிகள் கூட்டத்தின் தலைவர் ஆக நடிக்கிறார் என நினைக்கிறேன். இன்னும் அவரை நேரில் சந்திக்கவில்லை. ஆனால், எனக்கு மிகவும் பிடித்த இந்திய நடிகர் தனுஷ். என்னை அவர் ட்விட்டரில் பின் தொடர்கிறார். இதை நினைத்தாலே எனக்குப் பெருமையாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Trending

Exit mobile version