தமிழ்நாடு

மாநகராட்சியாக மாறியது தாம்பரம்: தமிழக அரசு அறிவிப்பு!

Published

on

தாம்பரம் நகராட்சி, மாநகராட்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டிருக்கிறார்.

மேலும் காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகள் ஆக மாற்றப்படும் என்றும், பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், தாரமங்கலம், திருமுருகன்பூண்டி, பேரூராட்சிகள் நகராட்சிகள் ஆக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநகராட்சி ஆக வேண்டும் என்பதற்கு தற்போது நிறைவேறியதற்கு அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version