சினிமா செய்திகள்

சினிமாவுக்கு குட்பை சொன்ன தங்கல் நாயகி!

Published

on

ஆமீர்கானின் தங்கல் படத்தில் சிறு வயது கீதா போகட்டாக நடித்து பலரது மனங்களை கவர்ந்த ஜைரா வசீம், சினிமாவில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

ஆமீர்கானின் தங்கல் மற்றும் சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படங்களில் நடித்த ஜைரா வசீம், சினிமாவில் இனி நடிக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். இதற்கு காரணம், பாலிவுட் சினிமா, தனது மதக் கோட்பாடுகளை அவமதிப்பதாகவும், மதப்பற்று உள்ள தன்னை அது திசைதிருப்பதுவும் தான் காரணம் என பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

இதனால், ஜைரா வசீம் என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பாரம்பரியம் மிக்க காஷ்மீர் இஸ்லாமிய குடும்பத்துப் பெண், சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து, ரோல் மாடலாக இருக்கலாம் என சினிமா துறைக்கு வந்தவர். ஆனால், அவரது புகைப்படங்களை மார்பிங் செய்வது என்றும், விமானத்தில் அவர் செல்லும் போது நடந்த விஷமத் தனங்களை மீடியாக்கள் பப்ளிசிட்டி செய்தது என்று பல சிக்கல்களை சந்தித்து வந்த ஜைரா வசீம், தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version