இந்தியா

ஒமிக்ரான் நோயில் இருந்து குணமான முதல் நோயாளி: அச்சம் தேவையில்லை என அறிவிப்பு!

Published

on

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டாலும் அதில் பெரும்பாலானோர் தகுந்த சிகிச்சை எடுத்து குணமாகினர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்தியா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மனித உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் கூறினர்.

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது 20-க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் முதல் நபராக மும்பையை சேர்ந்த ஒருவர் ஒமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளார்.

மும்பையை அடுத்த கல்யாண் என்ற பகுதியை சேர்ந்த ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தனிமைப்படுத்திக் கொண்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை காரணமாக குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாகவும் எனவே ஒமிக்ரான் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version