இந்தியா

நாட்டின் முதல் BH வாகன பதிவு எண் விநியோகம் தொடங்கியது!

Published

on

மத்திய அரசின் கொள்கையான ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றின் வரிசையில் ஒரே நாடு ஒரே வாகன பதிவு என்ற முறை விரைவில் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.

குறிப்பாக வாகன உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து விதியின்படி அந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு வாகன பதிவு மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது.

இந்த சிக்கலை தீர்க்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் புதிய பாரத் வரிசை பதிவு எண் என்பது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பின்படி வாகன பதிவு வசதி தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் இந்த பதிவின் கீழ் வாகனம் மோட்டார் வாகன பதிவு கட்டணம் கூடுதலாக இருக்கும் என்றும் அறிவிக்க இருந்தது.

மாநிலம் விட்டு மாநிலம் மாறுபவர்களுக்கு ஏற்படும் அலைச்சலை தவிர்க்கும் நோக்கில் வாகன உரிமையாளர்கள் மீண்டும் மீண்டும் வாகன பதிவு செய்வதை தவிர்ப்பதற்காக பாரத் சீரியஸ் என்ற தொடங்கும் பதிவு இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்படி நாட்டின் முதல் பி.எச். பதிவு எண்ணை மும்பையைச் சேர்ந்த ரோகித் ஷூத் என்பவர் பெற்றுக்கொண்டார். மேலும் பலர் பிஎச் வாகனப்பதிவு எண்ணை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version