தமிழ்நாடு

தமிழகத்தின் முதல் வேளாண் பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்!

Published

on

தமிழக வரலாற்றில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் இன்று முதல்முதலாக தாக்கல் செய்யப்படும் நிலையில் இந்த பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் சற்று முன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

பனைவெல்ல பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம்! 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்! பனைமரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து கிராமங்களும் வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவது இந்த திட்டத்தின் நோக்கம்

இயற்கை எருவை பயன்படுத்துபவர்களில் பட்டியல், இயற்கை விவசாயிகள் பட்டியல் என வட்டாரம் தோறும் தயாரிக்கப்படும். இயற்கை எருவை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ’இயற்கை விவசாயிகள்’ என்ற சான்றிதழ் வழங்கப்படும்.

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கப்படும்.

திருவள்ளூர் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி தேனி மாவட்டங்களில் உள்ள அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் இதற்கு ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும்.

இயற்கை எரு தயாரிப்பு, விளை பொருள் ஏற்றுமதி, வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடுதல் போன்ற தொழில்கள் செய்ய வழிவகை

கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும்.

இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை; கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்!

சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம்; தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக்கப்படும்!

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும்.

படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல கூடாத இளைஞர் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் தொடங்கப்படும். இளைஞர்களின் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

இவ்வாறு வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Agri-Budget-Specch-Tamil.pdf” title=”Agri Budget Specch Tamil”]

seithichurul

Trending

Exit mobile version