வேலைவாய்ப்பு

நிதி ஆயோக் வேலை!

Published

on

இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு நிதி ஆயோக் (NITI Aayog) – NITI – National Institution for Transforming India)) (கொள்கைக் குழு) 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து செயல்படத் துவங்கியுள்ளது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள். இதன் தற்போதைய துணைத் தலைவராக அரவிந்த் பணக்காரியா உள்ளார்.

இந்த அமைப்பில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 82. Innovation Lead, Monitoring & Evaluation Head, Young Professional வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 82

பதவி: Innovation Lead
காலியிடங்கள்: 12

வேலை: Monitoring & Evaluation Head
காலியிடங்கள்: 10
மாத சம்பளம்: ரூ. 80,000 – 1,45,000

வயது: 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: அறிவியல், டெக்னாலஜி, கம்பியூட்டர் அப்பிளிகேஷன், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம், வணிகவியல், மேலாண்மை, சட்டம், தொடர்பியல், இதழியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஇ, பி.டெக் அல்லது சிஏ, சிஎஸ்ஐ, ஐசிடபுள்யூஏ முடித்து 3 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Young Professional
காலியிடங்கள்: 60
மாத சம்பளம்: ரூ.60,000
வயது: 32க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பிஇ, பி.டெக் அல்லது மேலாண்மைத் துறையில் 2 வருட முதுகலை டிப்ளமோ அல்லது எம்பிபிஎஸ் அல்லது எல்எல்பி அல்லது சிஏ, ஐசிடபுள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.niti.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.niti.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: தேதி: 02.06.2019

Trending

Exit mobile version