சினிமா
நாளை திரைக்கு வரவிற்க்கும் இமைக்கா நொடிகள் படத்தின் “நீயும் நானும் அன்பே“ என்ற பாடல் இன்று வெளியாகிள்ளது!
இமைக்கா நொடிகள் படத்தில் வரும் நீயும் நானும் என்ற பாடல் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் தான் நயன்தாரா கர்ப்பமாகியுள்ளார்
கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் அதர்வா, நயன்தாரா நடிக்கின்றனர். நடிகர் அதரவா மற்றும் நயன்தாரா நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் தமிழ் படம் இமைக்கா நொடிகள். இந்தப் படத்தில் இடம் பெறும் நீயும் நானும் என்ற பாடல் இன்று வெளியாகி வைராளாகி வருகிறது.
அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்க, நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் அதர்வா, நயன்தாரா நடிக்கின்றனர்.
பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
காதலியின் படப் பாடல் வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் ப்ரொமோட் செய்துள்ளார். கோலமாவு கோகிலா படம் ஹிட்டான நிலையில் நாளை இமைக்கா நொடிகள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.