சினிமா செய்திகள்

உதிர்ந்தது உதிரிப்பூ… பிரபல இயக்குநர் மகேந்திரன் காலமானார்!

Published

on

சினிமா இயக்குநராகும் ஆசையில் கோடம்பாக்கம் வரும் இயக்குநர்கள் எல்லாம், உதிரிப்பூக்கள் படத்தை பார்த்து பாடம் கற்றுக் கொள்ளாமல் வந்ததில்லை.

சினிமா கலைஞர்களுக்கே பாடமாக விளங்கக் கூடிய உதிரிப்பூக்கள் படத்தை இயக்கிய இயக்குநர் மகேந்திரன் காலமானார்.

சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79.

அண்மையில், விஜய்யின் தெறி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார். மேலும், ரஜினியின் பேட்ட, உதயநிதி ஸ்டாலினின் நிமிர் உள்ளிட்ட படங்களிலும் மகேந்திரன் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் காளி, ஜானி, கைகொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரஜினியின் நெருங்கிய நண்பராகவும் ஆசானாகவும் திகழ்ந்தவர் மகேந்திரன்.

seithichurul

Trending

Exit mobile version