சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் சென்ராயன் (வீடியோ)

Published

on

பிக்பாஸ் வீட்டில் தொடங்கிய போது 16 போட்டியாளர்கள் இருந்தார்கள். இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 9 பேர் வெளியாகியுள்ளனர். தற்போது விஜயலட்சுமி புதுவரவாக வந்துள்ள நிலையில் தற்போது 8 பேர் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார் சென்றாயன். ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்றே பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். காரணம் மக்கள் மத்தியில் அவருக்குக் கிடைத்துள்ள இமேஜ். பிக் பாஸ் இவருக்கு மட்டும் அதிகச் சலுகை தந்து ஒவ்வொரு முறையும் காப்பாற்றுவதாகக் கூடப் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டு விட்டதாகவும் அறிவித்தார். இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோ ஒன்றையும் நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படப்போகும் நபரைப் போட்டியாளர்களிடையே கேள்வியாகவும் கமல்ஹாசன் முன் வைக்கிறார். அதற்கு விஜயலட்சுமி உள்ளிட்ட சிலர் மும்தாஜின் பெயரைக் கூறுகின்றனர்.

அதற்குச் சில தினங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டுக்குச் சென்ற இவரது மனைவி கயல்விழிக்கு அங்கு நலுங்கு நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. கணவர் எப்படியும் டைட்டில் வெல்வார் என எதிர்பார்த்திருந்த கயல்விழிக்குத்தான் இந்த வார எவிக்‌ஷன் ஏமாற்றத்தைத் தந்து விட்டது.

 

seithichurul

Trending

Exit mobile version