உலகம்

சூயஸ் கால்வாயில் தரைதட்டி நின்ற கப்பல் மீட்பு: நிம்ம்தி பெருமூச்சில் உலக நாடுகள்

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்ட நிலையில் தொழில்நுட்ப வல்லுனர்களின் தீவிர முயற்சியால் ஆறு நாட்களுக்குப் பின்னர் தற்போது அந்த கப்பல் மீட்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களை இணைக்கும் சூயஸ் கால்வாயில் தினந்தோறும் பல கப்பல்கள் சென்று வருகிறது. இந்த கால்வாய் காரணமாக ஆப்பிரிக்காவைச் சுற்றி வரும் நேரம் எரிபொருள், பணம் மிச்சமாகிறது என்பதால் இந்த கால்வாயை பெரும்பாலான கப்பல்கள் பயன்படுத்தி வருகின்றன.

இந்த கால்வாய் மூலம் சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு தினமும் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது என்பதும் அது மட்டுமின்றி உலக வர்த்தகத்தில் 12% இந்த கால்வாய் வழியாக தான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 400 மீட்டர் நீளம் 59 மீட்டர் உயரம் கொண்ட எவர்கிரீன் என்ற கப்பல் சமீபத்தில் மணல் புயல் காரணமாக இந்த கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன் சிக்கிக்கொண்டது. இதனை அடுத்து இரு பக்கங்களிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் கால்வாயை கடக்க முடியாமல் காத்திருந்தன.

இந்த நிலையில் நெதர்லாந்திலிருந்து நிபுணர் குழுவினர் சுயஸ் கால்வாயை விரைந்து எவர்க்ரீன் கப்பலை மீட்கும் பணியில் மேற்கொண்டனர். ஆறு நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் தற்போது கப்பல் மீட்கப்பட்டுள்ளதாகவும் தற்போது கப்பல் மிதக்க தொடங்கி இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

சூயஸ் கால்வாயில் தரைதட்டி நின்ற எவர்கிரீன் என்ற சரக்கு கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை அடுத்து உலக நாடுகள் நிம்மதி அடைந்துள்ளன.

Trending

Exit mobile version