தமிழ்நாடு

4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்?

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்தல் விதிமுறைகளை ஐந்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதுமட்டுமின்றி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளின் பறக்கும் படை சோதனையிட்டு வருகின்றனர்

இந்த நிலையில் இந்த பறக்கும் படையினர் 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்ததாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் அருகே ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 25 கோழி குஞ்சுகளை இலவசமாக அதிமுகவினர் வழங்கி வருவதாகவும் இதனை வாங்கிக் கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டதாகவும் ஒரு தகவல் மிக வேகமாக பரவியது.

இந்த தகவல் தேர்தல் பறக்கும் படையினர்களுக்கும் வந்ததை அடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற பறக்கும் படையினர் அதிமுகவினர் வைத்திருந்த 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர்.

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருள்கள் கொடுப்பதுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது கோழிக்குஞ்சுகளை கொடுத்து வாக்கு கேட்கும் நிலைக்கு வந்து விட்டதே என்ற வருத்தம் தான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version