இந்தியா

40 பைசாவிற்காக வழக்கு போட்டவருக்கு ரூ.4000 அபராதம் விதித்த நீதிபதி!

Published

on

40 பைசாவிற்காக வழக்கு போட்ட ஒருவருக்கு நீதிபதி 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஒரு பொருள் வாங்கும் போது அந்த பொருளுக்கான ஜிஎஸ்டி விலையுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்பதும் ஜிஎஸ்டி சேர்க்கப்படும்போது அது பைசா கணக்கில் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஐம்பது பைசாவுக்கு குறைவாக இருந்தால் கழித்து கொள்ளும்படியும் 50 பைசாவுக்கு மேலாக இருந்தால் அதை ரவுண்ட் ஆப் செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த ஒருவர் ஹோட்டல் ஒன்றில் உணவகத்தின் பார்சல் வாங்கிச் சென்ற போது 264.60 ரூபாய் என பில் தொகை வந்தது. இதனை அடுத்து ஓட்டல் நிர்வாகம் அவரிடம் ரூபாய் 265 வசூல் செய்தது. இதனை அடுத்து தன்னிடம் 40 பைசா கூடுதலாக வசூல் செய்ததாக ஹோட்டல் நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதம் செய்தார்.

மேலும் ஹோட்டல் நிர்வாகம் 40 பைசா திருப்பி தரவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த 40 பைசா வழக்கு 8 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டிய நீதிபதி, பில் தொகையை வரும்போது 50 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அதை நிறுவனத்தினர் கழித்து கொள்ள வேண்டும் என்றும் 50 பைசாவுக்கு மேலாக இருந்தால் ரவுண்ட் ஆப் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து மனுதாரர் சுயவிளம்பரத்திற்காக இந்த வழக்கை போட்டதாக கூறி 4,000 ரூபாய் அபராதம் விதித்தார். இதில் 2000 ரூபாய் ஓட்டல் நிர்வாகத்தினர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

 

seithichurul

Trending

Exit mobile version