சினிமா

வடசென்னையில் அந்த ’சீன’ தூக்கப்போறாங்களாம்!

Published

on

வடசென்னை படத்தில் அமீருக்கும் ஆண்ட்ரியாவுக்கும் திருமணம் ஆகி படகு ஒன்றில் முதலிரவு நடக்கும். அப்போது வரும் என்னடி மாயவி பாடலில் ஆண்ட்ரியா அரைநிர்வாணமாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த காட்சி மீனவ சமுதாய மக்களை மிகவும் பாதித்ததாகவும், மேலும், அவர்களை தவறாக சித்தரித்த காட்சிகளை நீக்குமாறும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த முதலிரவு காட்சியை படத்தில் இருந்து நீக்கப்போவதாக இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் தெரிவித்தார்.

மீனவர்களை தவறாக சித்தரித்ததாக எதிர்ப்புகள் குவிவதால் வடசென்னை படத்தில் மேலும், சில காட்சிகளையும் தணிக்கை குழுவுடன் ஆலோசித்து 10 நாட்களுக்குள் நீக்க முடிவு செய்துள்ளனர். படத்தில் வரும் ஆபாச வார்த்தைகளுக்கும் பீப் போட திட்டமிட்டுள்ளதாக தகவல்.

 

Trending

Exit mobile version