செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் பேசாமல் இருந்தார் முதல்வர்!

Published

on

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதிய வேளையில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தர்காவில் தொழுகை தொடங்கியவுடன் சுமார் 5 நிமிடம் அமைதி காத்தார்.

வரும் மார்ச் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் பல இடங்களிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (புதன்கிழமை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். முதலில் அண்ணா நினைவகத்தில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அண்ணாரது வாழ்க்கை வரலாறுகள் தொகுக்கப்பட்டதை மேற்பார்வை செய்தார். பிறகு பிரச்சார வாகனத்தின் மூலம் காஞ்சிபுரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மதியம் சரியாக 1 மணியளவில் தர்காவில் தொழுகை வழிபாடு நடைபெற்றது. தனது பிரச்சாரம் தொழுகை வழிபாடு செய்வதற்கு இடையூறாக இருக்கக்கூடும் எனக் கருதி சுமார் 5 நிமிடம் அமைதி காத்தார். முதல்வரின் இந்தச் செயல் அங்கிருப்போரை மனம் நெகிழ வைத்தது. இதனை அறிந்த இஸ்லாமியவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றர். முதல்வரின் இந்த மரியாதைக்குரிய செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version