தமிழ்நாடு

ஒரே ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளரா? காயத்ரி ரகுராம் வெளியிட்ட ஆதாரம்!

Published

on

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தார் என்றும் அவரது குடும்பத்திலேயே ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியிலிருக்கும் ஒரு தேசிய கட்சியான பாஜக, ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றுள்ளது பெரும் அவமானமாக கருதப்பட்டது. அதிலும் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் கூட வாக்களிக்கவில்லை என்று நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார் என்று செய்தி பரவி வரும் நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற வேட்பாளர் பாஜக வேட்பாளர் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஒரு சுயேச்சை வேட்பாளர் என்றும் பாஜகவை வேண்டுமென்றே அவமதிப்பு செய்வதற்காக அவர் பாஜக வேட்பாளர் என பொய்யான தகவலை ஒரு சிலர் பரப்பி வருவதாகவும் அவர் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.

கோவை உள்ளாட்சி தேர்தல் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்திக் என்ற அந்த வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அளிக்கப்பட்ட மனுவில் சுயேச்சை வேட்பாளர் என்று குறிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை அடுத்து ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றவர் சுயேச்சை வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version