இந்தியா

இந்த 6 தூண்களின் மையமே 2021 பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு!

Published

on

மத்திய பட்ஜெட் 2021 என்பது 6 தூண்களின் அடிப்பைடையில் தான் கட்டமைக்கப்பட்டு இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘சுகாதாரம் மற்றும் உடல் நலம், நிதி முதலீடு, அனைத்துத் தரப்புக்குமான வளர்ச்சி, தனி நபர் வருமானம், புதிய கண்டுபிடிப்பு மற்றும் குறைந்தபட்ச தலையீடு ஆகியவற்றின் அடிப்படையில் 2021 பட்ஜெட் கட்டமைக்கப்பட்டு உள்ளது’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக அவர், ‘கொரோனா தொற்றைப் பொறுத்தவரை இந்தியாவில் தான், மிகக் குறைவான இறப்பு விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார மீட்சி என்பதும் நல்ல முறையில் இருந்தது.

கொரோனா தொற்றை சமாளிக்க நாம் இரண்டு தடுப்பூசிகளைப் பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதித்துள்ளோம். இன்னும் இரண்டு தடுப்பூசிகள் சீக்கிரமே பயன்பாட்டுக்கு வரும்.

நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்னும் காரணத்திற்காக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்கிற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

seithichurul

Trending

Exit mobile version