இந்தியா

மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் நடிகர் விவேக் உடல்: காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்!

Published

on

மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானா நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் சற்றுமுன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்ட காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அந்தவகையில் இன்று விவேக்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக விவேக்கின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை மற்றும் சடங்குகள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று முன்னர் அவரது உடல் மின்மயானத்தில் ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் தகனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version