வணிகம்

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரன் முகேஷ் அம்பானி பரிந்துரைக்கும் 7 புத்தகங்கள்!

Published

on

தமிழ்நாட்டு மக்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் பரிந்துரைப்பார். அதே போல, இந்திய மக்களுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி பல்வேறு பேட்டிகளில் பரிந்துரைத்த 7 புத்தகங்கள் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

1) தி இன்னோவேட்டர்ஸ் டிலெம்மா (The Innovator’s Dilemma)

கிளேடன் எம் எழுதிய தி இன்னோவேட்டர்ஸ் டிலெம்மா புத்தகம், புதுமை மற்றும் தொழில் துறை சீர்குலைவு பற்றிய புத்தகமாகும்.

2) தி வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (The Wealth of Nations)

ஆடம் ஸ்மித் எழுதிய தி வெல்த் ஆஃப் நேஷன்ஸ் புத்தகம் பொருளாதாரம் மற்றும் முதலாளித்துவம் பற்றிய அடிப்படை நூலாகும்.

3) தி வர்ல்ட் இஸ் ஃபிளாட் (The World Is Flat)

தாம்ஸ் எல் ஃப்ரைட் மேன் எழுதிய தி வர்ல்ட் இஸ் ஃபிளாட், உலகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கம் பற்றிய புத்தகமாகும்.

4) தி டா வின்சி கோட் (The Da Vinci Code)

டான் பிரவுன் எழுதிய, உலகம் முழுவதும் அதிகளவில் விற்பையாகிய தி டா வின்சி கோட் புத்தகம், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒரு பரபரப்பு நூலாகும்.

5) பகவத் கீதை (Bhagavad Gita)

இந்து மதத்தின் புனித நூல்களில் ஒன்று. இது வாழ்க்கை, கடமை மற்றும் மோட்சம் பற்றிய பாடங்களை விளக்கும் நூலாகப் பார்க்கப்படுகிறது.

6) தி இன்னோ வேட்டர்ஸ் (The Innovators)

வால்டர் ஐசாக்சன் எழுதிய தி இன்னோ வேட்டர்ஸ், பில்கேட்ஸ் , ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற வரலாற்றில் சிறந்த கண்டுபிடிப்பாளர்களைப் பற்றிய புத்தகம்.

7) திங்கிங், ஃபாஸ்ட் அண்ட் ஸ்லோ (Thinking, Fast and Slow)

டேனியல் காஹ்மேன் எழுதிய திங்கிங், ஃபாஸ்ட் அண்ட் ஸ்லோ புத்தகம் மனித மனம் எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பதைப் பற்றிப் பேசும் புத்தகமாகும்.

குறிப்பு

முகேஷ் அம்பானி பரிந்துரைத்த இந்த புத்தகங்கள் வெவ்வேறு தலைப்புகளைச் சேர்ந்தவை என்றாலும், அவை அனைத்தும் வெற்றி, தொழில் முயற்சி மற்றும் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கான பாடங்களையே வழங்குகின்றன.

Trending

Exit mobile version