இந்தியா

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர்..!

Published

on

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ளது. மொடேரா பகுதியில் அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு சர்தார் வல்லபாய் படேல் மைதானம் எனப் பெயர் இருந்தது. இந்த மைதானத்தில் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்த போது உரை ஆற்றினார். அப்போது தான் மைதானம் கட்டி முடிக்கப்பட்டு இருந்தது. தொடக்க விழா கூட நடத்தாமல் ட்ரம்ப்- மோடி உரையாற்ற அந்த மைதானம் திறக்கப்பட்டது.

ஆனால், இன்று தான் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இந்த மைதானத்தை திறந்து வைத்து பூமி பூஜை செய்து இந்த மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மைதானம் எனப் பெயர் சூட்டினார். இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் பிங்க் பால் டெஸ்ட் போட்டி இன்று முதல் இந்த மைதானத்தில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பிசிசிஐ செயலர் ஜே ஷா, விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ஆகியோர் பங்கேற்றனர்.

மாரடைப்பின் காரணமாக இரண்டு முறை ஆஞ்சியோ செய்து கொண்ட பிசிசிஐ தலைவர் கங்குலி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியது. ஆனால், ஓய்வில் இருப்பதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version