சினிமா செய்திகள்

ரோஜாப்பூவாக மாறிய லேடிகாகவின் முதுகு தண்டு?

Published

on

பிரபல பாடகியும் நடிகையுமான லேடி காகா, தனது முதுகு தண்டில் ரோஜாப்பூ டாட்டூ ஒன்றை வரைந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த இசை ஆஸ்கர் என்று அழைக்கப்படும் கிராமி விருது விழாவில் 3 கிராமி விருதுகள் வென்று அசத்திய லேடி காகா, வரும் பிப்ரவரி 24ல் நடைபெறும் ஆஸ்கர் விருது போட்டியிலும் பரிந்துரைக்கப்பட்டவர்.

இந்நிலையில், காதலர் தினமான நேற்று, தனது முதுகு தண்டில் நீண்ட பெரிய ரோஜாப்பூ டாட்டூவை வரைந்து கொண்டார்.

பிரபலங்களுக்கு டாட்டூ போடும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த பிரபல டாட்டூ கலைஞரான டேனியல் வின்டர் ஸ்டோன், லேடிகாகாவின் முதுகில் இந்த அழகிய டாட்டூவை வரைந்துள்ளார். மேலும், அதில் எனது முதுகு தண்டு ரோஜாவாக மாறியது என்ற வாசகத்தையும் லேடிகாக எழுத சொல்லி கேட்க, அதனையும் டிசைன் வடிவிலே எழுதியுள்ளார் டேனியல்.

இசை பிரியரான லேடி காகா முதுகின் ஓரத்தில் முன்னதாக இசை சுவரங்களின் வடிவங்களையும் டாட்டூவாக போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலை அடையாளப்படுத்தும் ரோஜாப்பூவை காதலர் தினமான நேற்று டாட்டூவாக போட்டுக் கொண்டு பேஷன் உலகிலும் தான் டாப் என்று நிரூபித்துள்ளார்.

Trending

Exit mobile version