சினிமா செய்திகள்
இறுதி யுத்தத்தில் அவதாரை வீழ்த்திய அவெஞ்சர்ஸ்!
கடந்த பத்து ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்த அவதார் திரைப்படத்தின் வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கடும் போராட்டங்களுக்குப் பின் முறியடித்துள்ளது.
ஏப்ரல் மாதம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் 25 ஆயிரம் கோடி வசூலை தாண்டியுள்ளது. 22 ஆயிரம் கோடி வசூல் செய்திருந்த டைட்டானிக் வசூலை முறியடித்துவிட்டு அவதார் வசூலை முறியடிக்க முடியாமல் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திணறியது.
டைட்டானிக் வசூலை முறியடித்தபோது டைட்டானிக் கப்பலை மீண்டும் அவெஞ்சர்ஸ் மூழ்கடித்து விட்டனர் என ஜேம்ஸ் கேமரூன் பதிவிட்டு பாராட்டியிருந்தார்.
ஆனால், அவதார் வசூலை முறியடிக்க திணறிய அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், இறுதி காட்சிகளில் சில கூடுதல் காட்சிகளை இணைந்து மீண்டும் ரீ ரிலிஸ் செய்தது. ஆனால், அப்போதும் அவதார் சாதனையை முறியடிக்க முடியாமல் பல வாரங்கள் தவித்து வந்த நிலையில் தற்போது முறியடித்துள்ளது.
இதனையும் பாராட்டி அவதார் குழு சார்பாக அயன்மேன் ஏவா கடவுள் இடத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.